மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள முத்துகிருஷ்ண பேரியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது சுரண்டையிலிருந்து நெல்லை நோக்கி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது சிவகுருநாதபுரத்தை சேர்ந்த மாடசாமி என்பவர் எவ்வித ஆவணமுமின்றி கொண்டு வந்த 95 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.ஆலங்குளம் பகுதியில் 3 நாட்களாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்