ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கஜா புயலால் விழுந்த தென்னை உள்ளிட்ட மரங்களை அகற்றுவது மற்றும் கொள்முதல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் 85 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்குள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடையும் என கூறிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யவும் அறிவுறுத்தினார்.