பேச்சுவார்த்தையில் உடன்பாடு : இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

சென்னையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பிற துறைகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த பின்பு, ஆசிரியர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து முடிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இடை நிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version