திருவாரூரில் பெய்து வரும் மழையால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்னிலம், சன்னாநல்லூர், அதம்பார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை கோடை கால குருவை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தண்ணீரினால் விவசாயம் செய்தாலும், மழை நீர் கதிரின் மீது பட்டால் தான் கதிரானது விரைவில் வளர்வதற்கு உகந்ததாக இருக்கும் என்றும், மழை நீருடன் ஆற்றுநீரும் கிடைத்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று கூறும் விவசாயிகள், தமிழக அரசு ஆற்றில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version