மிகச் சிறிய விமானத்தின் உதவியால் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்த மனிதர்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர், கைரோகாப்டர் எனப்படும் மிகச் சிறிய விமானத்தின் உதவியால், உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

ஹாம்ப்ஷையர் பகுதியைச் சேர்ந்த கெட்ச்செல் என்பவருக்கு, ஏதாவது சாதனை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருந்து வந்தது. இதையடுத்து, தனியாக உலகைச் சுற்றி வர முடிவு செய்த அவர், ஹெலிகாப்டர் போன்று இயங்கும் கைரோகாப்டர் என்ற சிறிய விமானத்தின் உதவியுடன், அதனை நனவாக்க முயன்றார். இதற்காக கடந்த மார்ச் மாதம் தனது பயணத்தைத் தொடங்கி, இங்கிலாந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளின் வழியாக, ரஷ்யா, கனடா மற்றும் அமெரிக்காவைக் கடந்து, நடுவில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட சுமார் 38 ஆயிரத்து 624 கிலோ மீட்டர் தூரத்தை, தனி ஆளாக கடந்து சென்று, சாதனை படைத்துள்ளார் கெட்ச்செல். இந்தச் சாதனையை அவர் 175 நாட்களில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version