மத்திய ஜவுளி, மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்
சென்னை வந்துள்ள ஸ்மிருதி இரானி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளித்தார்