50% அரசு மானியத்துடன் ஒருங்கிணைந்த பண்ணை – செய்தித் தொகுப்பு

அரியலூரில் அரசின் மானியத்துடன் கடன் பெற்று ஒருங்கிணைந்த பண்ணை அமைத்துள்ள இளைஞர்கள் ஆண்டுக்கு  7 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர். இது குறித்த செய்தித் தொகுப்பு

விவசாயிகளின் வாழ்வதாரத்தை உயர்த்தவும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் விவசாய பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி, சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசின் நிதியுவுடன் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்துள்ள அரியலூர் விவசாயி அசோக்குமார் வருடத்திற்கு 7 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கிறார்.
 
தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் மத்திய மாநில அரசுகள் நிதியுதவிடன் மீன்குட்டை, சோலார் மின்சாரம், கோழிப்பண்ணை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து பராமரித்து வருகிறார்.
 கோழிப்பண்ணையில் ஒரு பருவத்திற்கு 6ஆயிரம் கோழிகள் வீதம் வருடத்திற்கு 5முறை விற்பனை
செய்கிறார். அருகிலேயே மீன்பண்னை அமைத்து கோழிகளின் எச்சங்கள் மற்றும் உணவுக் கழிவுகளை மீன்களுக்கு உணவாக கொடுக்கிறார்.

கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படும் கோ-5, வேலிமசால் உள்ளிட்ட தீவன பயிர்களுக்கு அவற்றின் சாணமே உரமாக பயன்படுத்தப்படுகிறது. தலைச்சேரி,  கொடி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து அவற்றிற்கென தனியாக பரண் அமைத்துள்ளார்.
 
2 மீன் குட்டைகளை வெட்டியுள்ள அவர் சுமார் 5 ஆயிரம் கெண்டை மீன் குஞ்சுகளை
வளர்த்து வருகிறார். இதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள தமிழக அரசு மீன் குஞ்சு
உற்பத்தி நிலையத்திலிருந்து மீன்குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.

 ஒருங்கிணைந்த பண்ணைகளுக்கு மின்சார தேவைக்காக மத்திய அரசின்
80சதவீத மானியத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்தேவை குறைவதாக கூறும் அசோக்குமார் ஒருங்கினைந்த பண்ணையம் அமைத்துள்ளதன் மூலம் வருடத்திற்கு ஆண்டுக்கு 7 லட்சம் இலாபம் கிடைப்பதாக தெரிவிக்கிறார்.

10வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் அரசின் அத்தனை திட்டங்களையும் அறிந்து
கொண்டு அதன்மூலம் சம்பாதிக்கும் அசோக்குமார் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

Exit mobile version