கம்பி எண்ணும் தி.மு.க. வட்டச் செயலாளர் – தடையை மீறி லாட்டரி விற்பனை!

ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த திமுகவின் வட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தனிப்படை காவல்துறையினரிடம் திமுக வட்டச் செயலாளர் சிக்கியது எப்படி?

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவல்லிக்கேணி, சுந்தரமூர்த்தி விநாயர் கோயில் தெருவில் காவல்துறை தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருவர், நம்பர் ஒன் லாட்டரி சீட்டுக்களை காகிதத்தில் எழுதிக் கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டறிந்தனர். அவரை பிடித்து விசாரித்ததில், சந்தேக நபர் தி.மு.க.வைச் சேர்ந்த 116வது மேற்கு வட்டச் செயலாளர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 51 ஆயிரத்து 470 ரூபாய் பணம், ஒரு செல்போன், துண்டு காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகி விஜயகுமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version