பொதுவாக குளிர் அல்லது பனி காலத்தில் தான் உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புகள் உண்டாகும். இதற்கு காரணம் அளவுக்கு அதிகமான குளிர் இருப்பதால், மிகவும் மென்மையான உதடு கூட எளிதில் வறட்சியடைந்துவிடும். இந்த பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. அதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த டிப்ஸ் இதோ …..
தோல் உரிந்த உதடுகளை முதலில் தேங்காய் எண்ணெய் கொண்டு 5 நிமிடம் தேய்த்து வைக்க வேண்டும் .பிறகு சர்க்கரை மற்றும் தேன் கலந்த பேஸ்ட் எடுத்து கொண்டு… உதடுகளில் மெதுவாக scrub செய்யவும். இதனால் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் காய்ந்த தோல்கள் உரிந்து வெளியேறும்… அதுமட்டுமில்லாமல் உதடுகளில் இருக்கும் வலியும் குறையும் … வாரத்திற்கு 3 முறை இதனை பயன்படுத்தலாம் ..
இரண்டாவதாக வீட்டில் இருக்கும் நெய் – ஐ பேஸ்ட் போல் எடுத்து கொண்டு தினமும் இரவு நேரங்களில் தேய்த்து வந்தால் குளிர்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்புகளை தடுக்கலாம் .