உள்ளாட்சி தேர்தலில், தேனி மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் சிற்றூராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளில் அதிமுக 7 இடங்களிலும், கூட்டணி கட்சியான பாஜக 1 இடத்தையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, வெற்றி பெற்றவர்கள் அனைவரும், வெற்றிச் சான்றிதழ்களுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.