விங் கமாண்டர் அபிநந்தனின் விமானப் படைக்கு துணிச்சல் விருது அறிவிப்பு

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப் படைக்கு துணிச்சல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்கு பதிலடியாக மறுநாள் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள், இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்றன. அப்போது இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து, அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றிருந்த 51வது படைப்பிரிவுக்கு, இந்திய விமானப்படையின் “யூனிட் சைட்டேஷன்” எனப்படும் விருது வழங்கப்படும் என விமானப்படை தளபதி, ஆர்கேஎஸ் பதுரியா அறிவித்துள்ளார்.

Exit mobile version