சென்னையில் காலை முதல் மேக மூட்டம் இருந்த நிலையில் மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
வடபழனி,விருகம்பாக்கம், முகப்பேர், வள்ளுவர் கோட்டம், அருகம்பாக்கம், வளசரவாக்கம்,கோடம்பாக்கம், சூளைமேடு, பல்லவரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதேபோன்று, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.