வில்சன் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த மாதம் 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இவ்வழக்கில் குற்றவாளிகளாக தேடப்பட்ட, குமரி மாவட்டத்தை சேர்ந்த தவ்பீக், அப்துல் சமீம் ஆகியோர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 பேர் கைதாகினர். வில்சன் கொலை வழக்கை கன்னியாகுமரி தனிப்படை காவல்துறை விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது.

Exit mobile version