காமன்வெல்த் போட்டியில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் : ஆசிய போட்டியில் 3 தங்கங்களை வென்ற நவீன்

காமன்வெல்த் போட்டியில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என ஆசிய பளுதூக்கும் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற நவீன் கூறியுள்ளார்.

ஹாங்காங்கில் நடைபெற்ற 16வது ஆசிய பளுதூக்கும் போட்டியில், இந்தியா சார்பில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நவீன் பங்கேற்று 83 கிலோ எடைப்பிரிவில் 3 தங்கப் பதக்கங்களும், ஒரு வெண்கல பதக்கமும் பெற்றார். இந்த நிலையில், ஹாங்காங்கில் இருந்து விமானம் முலமாக சென்னை வந்த அவருக்கு அவரது பெற்றோர், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்றது குறித்து, பெருமை அடைவதாக கூறினார். மேலும், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வாகி உள்ளதாகவும், காமன்வெல்த் போட்டியிலும் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என்றும் கூறினார்.

Exit mobile version