குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் கேள்வி…

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறுவை சாகுபடி தொடங்கியுள்ளது.

அதிமுக ஆட்சியில் குடிமராமத்து மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு, கடைமடை பகுதி வரை காவிரி தண்ணீர் சென்றதால், சாகுபடி அதிகரித்தது.

தற்போது புதிய ஆட்சியில், திருவாரூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுறது.

இந்த நிலையில், கடந்த வாரம் தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில், பாமர விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனவும்,

திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பேசிக் கொண்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Exit mobile version