ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், நாளை திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்தாண்டு நடத்தப்பட இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது தொடங்க உள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கைகளுடன் நடத்தபடும் இப்போட்டியில் சுமார் 200 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக்குடன் தொடர்புடைவர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும், வீரர், வீராங்கனைகள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் என இதுவரை 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது சக போட்டியாளர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இருந்தபோதிலும் போட்டியை ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.