12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் வரலாற்றில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை இரு நாடுகளின் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணியை வென்றதாக சரித்திரமில்லை.
1992ம் ஆண்டு முதல் 2015 வரை 3 கேப்டன்களின் கீழ் 6 உலகக்கோப்பை விளையாடியுள்ள இந்திய அணி இந்த பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளதால் இந்த முறையும் அந்த வரலாறு திரும்புமா என எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள்.
1992, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் அசாருதீன் தலைமையிலும், 2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலும் 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் டோனி தலைமையிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது.
தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையை தக்க வைக்கும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். விராட் கோலி தலைமையிலான புதிய அணி களமிறங்கியுள்ளது. முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய இந்திய அணி அதைவிட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறது.