திமுக அரசின் அலட்சியத்தால் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணான நெல்லுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அவர், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள், மழையில் நனைந்து நெல்மணிகள் முளைப்பது குறித்து ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
நெல் மூட்டைகள் வீணானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்குமா? என்றும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, விவசாயிகளிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை என்று மழுப்பலாக பதிலளித்தார்.
அவரது பொறுப்பற்ற பதில் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.