கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவ தேவை போன்றவற்றுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என மத்திய அரசு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இ-பாஸ் நடைமுறை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.