உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் பங்கிடுவதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளதால் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் பத்து நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுமூகமாகவும், உற்சாகமாகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திமுக கூடாரம் உள்குத்து அரசியலால் உடைந்து வருகிறது. போட்டியிட போதுமான போதுமான இடங்கள் ஒதுக்கவில்லை என்றும் தங்களை சுயமரியாதையுடன் நடத்தவில்லை எனவும் கண்ணீர் வடிக்கின்றனர் கூட்டாணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும். திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்கள் காங்கிரசுக்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள இடங்கள் உள்ள நிலையில், சொற்ப இடங்கள் மட்டுமே ஒதுக்கி திமுக தங்களை அவமானப்படுத்துவதாக குமுறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். திருச்சி காங்கிரஸ் நிர்வாகியும், கிருஷ்ணகிரி மக்களைவை உறுப்பினருமான செல்லக்குமாரின் ஆதரவாளருமான ஜி.கே. முரளிதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளிப்படையான கேள்விகளால் திமுகவை துளைத்து எடுத்துள்ளார். மேலும், நேர்மையான அரசியலுக்கு உதாரணமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியான இமையா கக்கன் திமுக நிர்வாகிகளால் ஜாதி ரீதீயாக அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். திமுககாரன் திருந்தவில்லை என்றால் இந்த ஜென்மத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்றும் கண்ணியமிகு காயிதே மில்லத்திடம் நட்பு பாராட்டி முஸ்லிம் லீக் கட்சியை கருணாநிதி அழித்தது போல, காங்கிரஸ் கட்சியை திமுக இன்று அழித்து வருவதாக ஜி.கே. முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தொண்டர்களின் குமுரல்கள் இப்படி இருக்க, பல இடங்களில் திமுகவிற்கு எதிராகவே வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டார்கள் மற்ற கூட்டணி கட்சிகள்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டு உறுப்பினர் பதவிகளில் 3 இடங்களைத் தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கேட்டிருந்தது. அதற்குப் பதிலாக ஒன்றாவது வார்டை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த விடுதலைச் சிறுத்தைகள் 4 வார்டுகளில் திமுக வேட்பாளருக்குப் எதிராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் விடுதலை சிறுத்தகள் வேட்பாளர் ராஜசேகருக்கு எதிராக அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்றாவது வார்டில், திமுக சார்பில் இளையராஜா என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலும் மாவட்டத்திலும் பூதலூர், ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர் ஒன்றியங்களில் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலமுறை கவுன்சிலர்களாக இருந்த இடங்களில் கூட திமுக தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், ஐஜேகே உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 50 மேற்பட்டோர் திமுகவிற்கு எதிராக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதிகார பசிக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு திமுக அமைத்த சந்தர்பவாதக் கூட்டணி தற்போது உடையத் தொடங்கியுள்ளது. கருணாநிதி சொன்ன கூடா நட்பு கேடாய் முடியும் என்பது அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கே பொருந்தி இருப்பதால், திமுக கூட்டணி தேர்தல் வரையிலாவது தாக்குப் பிடிக்குமா என்று ஏளனம் செய்கின்றனர் பொதுமக்கள்.