நேபாள பிரதமர் ஷர்மா ஒலியின் பதவி தப்புமா?

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தொடர்ந்து பதவியில் நீட்டிப்பாரா? என்பதை தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் திடீரென இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளம். இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில், அரசின் நிர்வாக தோல்வி மற்றும் இந்தியாவுடனான மோதல் போக்கால் அதிருப்தியடைந்த ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒலி அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டனர். காத்மாண்டுவில் இன்று நடைபெறும் கட்சியின் உயர்மட்ட அலோசனை கூட்டத்தில் ஒலியின் பிரதமர் பதவி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version