'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா?

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தீபாவளியன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது. மேலும் ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்குகளில் தான் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் பொங்கலுக்கு ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Exit mobile version