பொது இடங்களில் சார்ஜ் போட்டால் தகவல்கள் திருடப்படுமா? – அதிர்ச்சி தகவல்

மக்கள் அதிகமாக கூடும் பொதுஇடங்களில் உங்களுடைய மின்னணு சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் போது அதிலிருந்து தகவல்கள் திருடப்படுவதாக எஸ்.பி.ஐ. வங்கி செய்தி வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் அதிகமான மின்னணு சாதனங்களை உபயோகிக்கிறோம். பெரும்பாலும் அவைகளுக்கு பவர் எனப்படும் சார்ஜ் ஏற்றுவதிலேயே பெரும்பாலான நேரங்கள் கழியும். இதனால் பவர் பேங்க் எனப்படும் கருவிகள் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. சில சமயங்களில் பயணத்தின் போது சார்ஜர்களை மறந்துவிட்டால் அவ்வளவு தான்.

பொதுவாக மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சார்ஜ் செய்வதற்காக சார்ஜர் போர்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் சார்ஜர் செய்யும் போது உங்களுடைய தகவல்கள் திருட வாய்ப்புள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. சில சார்ஜர் பாயிண்டுகளில் USB கேபிள்கள் இணைக்கப்பட்டிருக்கும். அதில் தான் அதிகளவு தகவல்கள் திருடப்படுவதுடன் உங்கள் பணமும் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே முடிந்தவரை பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய, சொந்த சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version