"பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" – செந்தில் தொண்டைமான்

இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிக்கப்படும் என்று, இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி சொக்கநாதபுரத்தில், இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரை தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்தனர்.

அப்போது, இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது குறித்தும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு வழங்கினர்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் தொண்டமான், எதிர் காலங்களில் இரு நாட்டு மீனவர்கள் சுமூகமான முறையில் கடலில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Exit mobile version