வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்படுமா?

வேலூரில் நடைபெற்று வரும் சோதனை குறித்த வருமான வரித்துறை அறிக்கையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த சோதனை முடிவடைந்த பின்னர் வருமான வரித்துறை தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை 78.12 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், நேற்று மட்டும் 1.10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Exit mobile version