குடிநீர் தேவைக்காக குடியிருப்பு பகுதிக்குள் புகும் வனவிலங்குகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைபகுதியில், குடிநீர் தேவைக்காக குடியிருப்பு பகுதிக்குள் புகும் வன விலங்குகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பகுதியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள வனப்பகுதியில் குட்டைகள் அமைக்கப்பட்டு, வன விலங்குகளின் குடிநீர் தேவை தீக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை ஏதும் இல்லாத காரணத்தால், குட்டைகள் வற்றும் நிலை உள்ளது. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வனப்பகுதியில் உள்ள குட்டைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version