உலகின் கடைசி இரண்டு வெள்ளை காண்டா மிருகங்களிடமிருந்து 7 முட்டைகள் வெற்றிகரமாக செயற்கையான முறையில் கருவுற செய்யப்பட்டுள்ளது.
உலகில், சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளது. தற்போது உலகில், வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையே மொத்தம் மூன்று தான் என்று கணக்கிடப்படுள்ளது. கென்யாவிலுள்ள மூன்று காண்டாமிருகங்களில் இரண்டு பெண் இனமும், ஒரே ஒரு ஆண் இனமும் அடங்கும். அதில் ஆண் காண்டாமிருகம் வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டதால், இனப்பெருக்கம் இல்லாத நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவியது. மேலும், இந்த இனம் அடியோடு அழிந்துவிடும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உயிரிழந்த ஆண் வெள்ளை காண்டாமிருகத்திடம் இருந்து பெறப்பட்ட விந்தணுக்களை கொண்டு செயற்கையான முறையில் கருத்தரிக்க முயன்றதில் 7 முட்டைகள் வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக வனவிலங்கு ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.