பெரியநாயக்கன்பாளையம் வனப் பகுதியில் உள்ள தொட்டிகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட பாலமலை, ஆனைக்கட்டி, பொன்னுத்துமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவுக்காக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி அடிவாரப் பகுதிகளான தேவையம்பாளையம், ஜல்லிமேட்டுப்புதூர், பூச்சியூர், நரசிம்மநாயக்கன்பாளையம், தெற்குபாளையம், புதுப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகிறன. மேலும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை யானைகள் அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதிகளில் உள்ள நீர் தொட்டிகள் வறண்டு காணப்படுகின்றன. எனவே, யானைகள் கிராமங்களுக்கு புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதை தடுக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்