குன்னூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வரையப்படும் வனவிலங்குகள் புகைப்படம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுவரில் படங்கள் வரையப்பட்டுள்ளது.

குன்னூர் இரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ணத்தில் வனவிலங்குகள் வரையப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுவரின் அருகில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அசுத்தம் செய்யாமல் இருக்க வன விலங்குகளின் புகைப்படங்களை தத்துருவமாக வரையப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் அழகிய மலர்த் தோட்டமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று மலை ரயில்களிலும் இயற்கையுடன் கூடிய வனவிலங்களான மான், யானை, காட்டு மாடு, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் புகைப்படங்களுடன் மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version