காட்டுப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த காட்டெருமைகள்

சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டெருமைகளை வனத்துறையினர்  பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருக்கும் யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள், அவ்வப்போது வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விளைநிலங்களில் சேதம் ஏற்படுத்துவது வழக்கம். புளியங்கோம்பை என்ற ஊருக்குள்ல், திடீரென 2 காட்டெருமைகள் புகுந்ததால் அச்சமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் பல மணி நேரம் போராடிக் காட்டெருமைகளைக் காட்டுக்குள் விரட்டியடித்தனர். வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க அகழிகள் அமைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version