மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு தீ

குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மேக்கரை, புளியரை, குற்றாலம், அடவிநயினார் அணை, புலியருவி, காட்டாற்று அருவி போன்ற மலைப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுகிறது. இந்நிலையில் சுமார் எட்டு இடங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. மலை உச்சி பகுதிகள் என்பதால் வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீயால் அரியவகை மூலிகைச் செடிகள், வாசனை திரவிய மரங்கள் கருகி நாசமடைந்துள்ளன. வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version