வால்பாறை அருகே வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயால் பல்வேறு மரங்கள் எரிந்து சாம்பலாகின.
கோடைக்காலம் தொடங்கியதையடுத்து கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வாட்டர பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், வால்பாறை அட்டகட்டி வனப்பகுதியில் அப்பர் அழியார் மேல் பகுதி மற்றும் காடம்பறை மின் உற்பத்தி நிலையம் கீழ் பகுதியில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. வறண்ட வானிலை காரணமாக காட்டுத் தீ பரவி வருவதால், தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். காட்டுத் தீயால் 100 ஏக்கரில் இருந்த அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இதேபோன்று ஆனைக்கட்டி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருகிறது. இதனால், பல்வேறு மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தகவலறிந்து அங்கு விரைந்த இடத்திற்கு சென்ற வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.