திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிராமங்களில் சுற்றி திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உசிலம்பட்டி, சாலையூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் கடந்த 3 தினங்களாக காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் இந்த யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், 60-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து யானைகளை பட்டாசுகள் வெடித்து காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.