கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சேலம் மாவட்டம் கொளத்தூர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேட்டூரை அடுத்த கொளத்தூரையொட்டி பாலமலை, கத்திரிமலை உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில நாட்களாக கடும் வறட்சி நிலவுவதால், அங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி கிராம பகுதிகளை நாடி வருகின்றன. இந்த நிலையில், காவேரி கரையோரப் பகுதியான செட்டியூர் பகுதிக்கு உணவு தேடி 3 ஆண் யானைகள் வந்துள்ளன. விவசாய நிலத்தில் புகுந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தின இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர். யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.