நெல்லை மாவட்டம், வடகரையில் விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து 500 வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் செங்கோட்டை அருகே அமைந்துள்ள வடகரை கிராமத்தில் விவசாயிகள் தென்னை, வாழை, மா, கத்தரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் தென்னை மரங்களையும், சேதப்படுத்தியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.