தாளவாடி வனச்சாலைகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று, வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை வனச்சாலையில் நான்கு யானைகள் அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கும் இங்கும் நடமாடியதோடு, சில நிமிடங்களில் அங்கு நின்ற பொதுமக்களை துரத்த ஆரம்பித்தன. பின்னர் சாலையை கடந்து காட்டுக்குள் யானைகள் சென்றன. இதே போன்று ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் யானைகள் கூட்டம் கூட்டமாக நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.