விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; விவசாயிகள் கவலை

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கோட்டையை அடுத்த வடகரை, கீழ்பிடாகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வாழை, தென்னை, கத்திரி போன்ற பயிர்களை தங்கள் நிலங்களில் பயிரிட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமங்களில் புகுந்த யானைக் கூட்டம் 1,500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.

கடந்த சில நாட்களில் 2-வது முறையாக யானைக் கூட்டத்தினால் வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் யானைகளை காட்டுக்குள் விரட்டவும், யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழைய முடியாத படி அகழிகள் அமைக்கவும் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version