தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 4 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.
காட்டு யானைகளின் வாழ்விடமாக மேற்கு தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. இதனிடையே தடாகம் பகுதிக்குள் புகுந்த 4 காட்டு யானைகள் பெண் ஒருவரை தாக்கியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தடாகம் பகுதிக்கு 4 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாடிவாயல் மற்றும் முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் கும்கி யானைகள் மூலம் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.