கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்..

திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமாக காண்டூர் கால்வாய் உள்ளது.  திருமூர்த்தி அணையை நிரப்புவதற்காக, இந்தக் கால்வாய் வழியாக அணைக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு 10 வயது மதிக்கத் தக்க பெண் யாணை ஓன்று, தண்ணீர் குடிக்க முயன்ற போது கால் தவறி,  காண்டூர் கால்வாயில் விழுந்தது.

நீரின் வேகம் அதிக அளவில் இருந்ததால், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த யானை அடித்துச் செல்லப்பட்டது. சின்னசுரங்கம் பகுதியில் யானையின் சத்தத்தை கேட்ட விவசாயிகள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், 3 மணி நேரம் போராடி யானையை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

Exit mobile version