நீலகிரி மாவட்டம் குன்னூர் சீம்ஸ் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் காட்டு எருமைகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதால், சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் குடியிருப்பு பகுதியில் ஏராளமான காட்டு எருமைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், சீம்ஸ் பூங்கா நுழைவு வாயில் அருகே காட்டு எருமைகள் சண்டையிட்டு கொண்டதால், சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். சாலைகளில் சுற்றித்திரியும், காட்டு எருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.