கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள wifi மரம் இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோவை வ.உ.சி.மைதானத்தில் wifi தங்க மரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மரத்தில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, செல்போன், லேப்டாப் போன்றவற்றுக்கு பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்கும் வகையில் இந்த மரத்தின்மூலம் wifi வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மரத்தை பயன்படுத்துவதில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.