சத்தியமங்கலம் பாசனப்பகுதிகளில் பரவலாக மழை செய்துவருவதால் பாவனிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உள்ள இரட்டைப்படை மதகுகளுக்கும் சென்னசமுத்திரம் கிளைவாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளுக்கும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.தற்போதைய நிலவரப்பட்டி அணையின் நீர்மட்டம் 53.50 அடியாகவும், நீர் இருப்பு 5.3 டிஎம்சி யாகவும் உள்ளது