பாகுபலி படத்தின் மூலம் ரம்யாகிருஷ்ணனுக்கு ‘ராஜ மாதா’ என்ற கதாபாத்திரத்தினால் மிகுந்த வெற்றி கிடைத்தது.அவர் இடத்தில் எந்த கதாநாயகி நடித்து இருந்தாலும் அது பொருந்தியிருக்காது என்றும் கூட கூறலாம்.தற்போது விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் ‘ சூப்பர் டீலக்ஸ்’படத்தில் ஃபகத் பாசில்,சமந்தா,மிஷ்கின், காயத்ரி உள்ளிட்ட பல நட்சித்திரங்கள் நடிக்கின்றனர்.இப்படத்தை குமாரராஜா தியாகராஜன் இயக்குகிறார்.
இதில் ரம்யா கிருஷ்ணன் ஆபாசப்படத்தில் நடிக்கும் நடிகையாக நடித்துள்ளாராம்.அதில் முதலில் நடிகை நதியா தான் நடித்தாராம் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் சில காரணங்களால் நதியா படத்தில் இருந்து விலகிவிட்டராம். தற்போது அந்த கதாபத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். ஆபாசப்பட நடிகையாக நடித்தாலும் எல்லை மீறாத கவர்ச்சியில் தான் நடித்துள்ளாராம்.மேலும் இந்த கதாபாத்திரத்தில் ஏன் ரம்யா கிருஷ்ணன் நடித்தார் என்பதை படத்தை பார்த்த பின்பு ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என குமாரராஜா தியாகராஜன் கூறியுள்ளார்.
எந்த ஒரு கதாநாயகியாக இருந்தாலும் மிகவும் வெற்றிபெற்ற ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து விட்டு, கவர்ச்சி நடிகையாக நடிப்பதற்கு சற்று யோசிப்பார்கள்.ஆனால் ரம்யாகிருஷ்ணன் துணிச்சலாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருநங்கையாக விஜய் சேதுபதி, ஆபாசப்பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளது சூப்பர் டீலக்ஸ் படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்பை அதிகரித்துள்ளது.மேலும் 2019 ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படங்களில் சூப்பர் டீலக்ஸ் படமும் ஒன்று.