இன்று இந்தியா முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.பண்டைய காலத்தில் கருவிகளை வைத்து வணங்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வரப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியே தற்போது ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. போருக்கு பயன்படுத்தபடுத்தப்படும், வேல், வில் போன்ற கருவிகளை வழிபடும் முறை ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆனாலும் ஆயுத பூஜை கொண்டாட பல கதைகள் கூறப்பட்டு வருகிறது.
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்ற கதை நாம் அறிந்ததே. நாடு இழந்து புகழ் இழந்து, வனவாசம் சென்ற பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கிய இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறதது.
இன்னும் ஒரு கூடுதல் தகவல் என்னவெனில், அரசர்களும், போர் வீரர்களும் விஜயதசமியன்று தான் போர் கருவிகளுக்கு பூஜை போட்டு, போர் பயிற்சியை துவங்குவார்களாம்.
இன்று நாடு நவீன வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், பண்பாட்டையும் பாரம்பரியத்தை மாற்றாமல், இருப்பது பெருமைப்படத்தக்க ஒன்றே.