சொந்த ஆதாயத்திற்காக சர்ச்சைகளை உருவாக்கும் நடிகர் கமல்

தமிழக அரசியல் களத்தில் நடிகர் கமலும், சர்ச்சையான பேச்சுக்களும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய் விதத்தில் பேசி இருந்தார்.அங்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் பேசியது எற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

‘சட்டப்பேரவைக்கு நான் செல்ல நேர்ந்தால், சட்டையைக் கிழித்துக் கொண்டு வரமாட்டேன். அப்படியே, கிழிந்தாலும் புது சட்டை அணிந்து கொண்டு தான் வெளியே வருவேன்’ என்று நேரடியாகவே திமுகவை தாக்கி பேசி இருந்தார் கமல்.இதற்கு திமுகவின் முரசொலியில், கமல் பேசுவது என்ன, ஏன் இப்படி பேசுகிறார் என கேட்போரை எல்லாம் சட்டையைக் கிழித்துக் கொள்ள வைப்பாரே தவிர, அவர் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும். அவருக்கு சொந்த புத்தியும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது கட்டுரை வடிவில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது.

பின்னர் அதே கல்லூரி நிகழ்வில் கமல்ஹாசன் பேசிய மற்றொரு விஷயம், சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதல் பற்றியும், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “ஏற்கனவே இந்த நாட்டை இரண்டாக கிழித்து விட்டோம். அதனால், ஏன் மீண்டும் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? காஷ்மீரில் ஏன் இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த மறுக்கிறது?, ஏன் அரசு பயப்படுகிறது? ஆசாத் காஷ்மீர் பகுதியில், ஜிகாதிகளின் படங்களை ரயில்களில் ஹீரோவாக சித்தரித்து பயன்படுத்துகின்றனர். அது மிகப்பெரிய முட்டாள்தனம். அதேபோன்ற ஒரு முட்டாளத்தனத்தை இந்திய அரசும் செய்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார்,.

இதில், காஷ்மீரை ‘ஆசாத் காஷ்மீர்’ என்று கமல்ஹாசன் கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அது எப்படி காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்ற நினைப்பில் கமல்ஹாசன் பேசலாம்? ஆகவே அவர் பிரிவினைவாதியா?’ என்ற ரீதியில் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நடிகர் கமல் மீது அதிருப்தி எழுந்தது.ஆனால் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்ததும், கமல் தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை வெளியானது.

இதேப்போல கடந்த வருடம் ஜீன் மாதம் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இன்று சந்தித்துப் பேசும் போது, காவிரி பிரச்சனை இன்று நேற்று வந்ததல்ல. 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை உள்ளது. தான் தமிழ்நாட்டு பிரதிநிதியாக கர்நாடகம் வந்துள்ளதாகவும் கமல் கூறியிருந்தார். அதே போல காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கமல் கூறியதையடுத்து தமிழகத்தில் இருந்த விவசாய சங்கங்கள் கொதித்து எழுந்தன. கர்நாடக முதலமைச்சரை கமல் சந்தித்தது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகம் என காவிரி உரிமை மீட்புகுழுவைச் சேர்ந்த பெ.மணியரசன் சொல்ல, உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காவிரி தீர்ப்பையே கமல் அவமதித்து விட்டார் என்று விவசாயிகள் சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்து இருந்தார்.

சொந்த மாநிலத்திலும் சர்ச்சை, அடுத்த மாநிலத்திலும் சர்ச்சை, மகாபாரம் குறித்து இழிவாக பேச அதுவும் சர்ச்சை ஆகி நீதிமன்றத்தில் ஆஜாராகும் வரை சென்றது தனிக்கதை.

தன்னுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக இப்படி செல்லும் இடமெல்லாம் ஏதாவது வாய்க்கு வந்தததை பேசும் நடிகர் கமல் தற்போது மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், இந்தியாவில் முதல் தீவிரவாதம் காந்தியின் படுகொலை என்றும், அதை தொடங்கி வைத்தவர் இந்துவான நாதுராம் கோட்சே என்று கூறி, மீண்டும் சர்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

இது தொடர்பாக தற்போது பாஜக தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டள்ளது. இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள அப்பகுதியில், கமல் இவ்வாறு பேசியது, அவர்களின் வாக்குகளை வாங்குவதற்காக கோடிக்கணக்கான இந்துக்களை மனதினை புண்படுத்தி இருக்கிறார். இப்படி பேசியதற்காக நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடைய மக்கள் நீதிமய்யத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யவும், 5 நாட்களுக்கு அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தடை வித்த வேண்டும் என்று பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version