இத்தாலியில் கொரானோ பாதிப்பு அதிகரிப்பது ஏன்?

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில்தான் என்ற போதும், சீனாவில் கொரோனா வைரஸ்சின் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக அதிக வேகத்தில் பரவுவதுடன், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றது.  சீனாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்தாலியிலோ 28,000 பேர் பாதிக்கப்பட்டதில் 2,100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இத்தாலியின் இறப்பு விகிதம் மோசமாக உள்ளது. இத்தாலியில் கொரோனா பரவலுக்கு 4 முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன.
 
உலகிலேயே முதியவர்கள் அதிகம் வாழும் நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியின் 6 கோடி மக்களில் 1.5 கோடிபேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதால் கொரோனாவால் இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

 
 
சுற்றுலா வருமானமே இத்தாலியின் மிக முக்கிய வருமானமாக உள்ளது. ரோமானிய கலைச் சின்னங்களுக்காக இத்தாலியில் பயணிகள் குவிகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் சீனாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன் காரணமாக சீனா-இத்தாலி இடையேயான விமானப் போக்குவரத்து 3 மடங்காக அதிகரித்தது. இப்படியாக சீனாவில் இருந்து வந்து இத்தாலியில் குவிந்த பயணிகளே இத்தாலியில் கொரோனா பரவக் காரணமாக இருந்தனர்.
 
இத்தாலியில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவுகளே மிகப் பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா இதன் மூலமும் பரவும் என்ற நிலையிலும், இத்தாலிய நிறுவனங்கள் பயோ மெட்ரிக் பயன்பாட்டை உடனடியாகக் கைவிடவில்லை. இது இத்தாலிய மக்களிடையே கொரோனா பரவ முக்கியக் காரணமானது.
 
இத்தாலியின் வடக்குப் பகுதியில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலாகப் பரவத் தொடங்கியது. அப்போது வடக்குப் பகுதியில் முழுக் கவனத்தையும் செலுத்திய இத்தாலிய அரசு, பிற பகுதிகளில் எந்த பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த கவனமின்மையால், இத்தாலி முழுவதும் கொரோனா வேகமாகப் பரவிவிட்டது

Exit mobile version