எந்த இனமும்,மதமும்,மொழியும் பாராமல் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு தினம் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறலாம். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி சுவாரசியமான தகவல்கள்.
நாம் கொண்டாடும் ஆங்கிலப்புத்தாண்டு 500 வருடங்கள் முன்பில் இருந்து பின்பற்றக்கூடிய ஒன்றாகும். அதற்கு முன்பாக, அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்த மெசப்டோனியர்கள் என்பவர்கள் 2000 ஆண்டுகளாக மார்ச் 25-ம் நாளை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். மார்ச் 25-ம் நாள் இயேசுவின் தாய் மேரி கருவுற்ற தினம் என்பதால் அந்நாளை புத்தாண்டாக கொண்டாடினர். இவர்கள் காலத்தில் வருடத்திற்கு மொத்தம் 10 மாதங்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து வந்த, ரோமானியர்கள் சூரிய நகர்வைக்கொண்டு மார்ச் முதல் நாளை புத்தாண்டு தினமாக மாற்றியமைத்தனர் என்று கூறப்படுகிறது.ரோமானிய மன்னர்களில் ஒருவரான நுமா பொம்பிலியஸ் என்பவர் மேலும், இரண்டு மாதத்தை கூட்டி ஆண்டிற்கு 12 மாதம் என்றும் அறிவித்தனர்.
புதிதாக சேர்த்த இரண்டு மாதத்திற்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர் வைக்கப்பட்டது. ரோமானியர்களின் “ஜனஸ் கடவுள்” நினைவாக ஜனவரி என்று பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்துவந்த ரோமானிய மன்னர்களின் ஒருவரான ஜுலியன் சீசர் என்பவர், ஜனவரி முதல் நாளை “புத்தாண்டு தினம்” என கி.பி. 46 ஆம் ஆண்டில் அதிகார பூர்வமாக அறிவித்தார் என சொல்லப்படுகிறது. இதனை ஜுலியன் காலண்டர் என அழைக்கப்பட்டது.
இவ்வாறாக, 1500 ஆம் ஆண்டு வரை ஆண்டின் முதல் நாள் மாற்றி கொண்டாடப்பட்டு வந்த நிலையில், 13-வது போப் ஆண்டவர் கிரிகோரி, கி.பி. 1582 ஆம் ஆண்டு ஜுலியன் காலண்டரை தடை செய்து, ஆண்டிற்கு 365 நாட்கள் என முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.பின்னர், பிப்ரவரி மாதம் லீப் மாதமாக மாற்றப்பட்டு 29 நாட்கள் என்று 12 மாதத்திற்கு 365 நாட்களை கட்டமைத்தனர்.இறுதியில், ஜனவரி முதல் நாளை புத்தாண்டு என அறிவித்து உலகம் முழுவதும் கிரிகோரிய காலண்டரை நடைமுறைப்படுத்தினர் என வரலாற்று தகவல்கள் கூறுகிறது.. இந்த, காலண்டரை பின்பற்றுவதால்தான் ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம்.