ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்?

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். அதைத்தொடர்ந்து ரிங் ரோட்டில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திடலில் பாஜக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான கால்கோல் நடும் விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்ககளை சந்தித்தார். அப்போது, மதுரையில் 27ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமையும் என்று கூறினார். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்காதது ஏன் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version