தான் எடுக்கும் படங்களுக்கு வைக்கப்படும் தமிழ் தலைப்புகளை கிண்டல் செய்கிறார்கள் என இயக்குநர் கே.வி . ஆனந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒன்றாக வலம் வருபவர் கே.வி . ஆனந்த் . ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் தனி தன்மையை வெளிப்படுத்துக்கின்றனர். அந்த வரிசையில் சங்கர் திரைப்படம் என்றால் பிரம்மாண்ட கதை , மணிரத்தினம் என்றால் ஒரு வரி வசனத்தில் கதை களம்.
இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் தமிழ் மொழி மீது மோகம் கொண்டதால் அவரின் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வைத்து ரசிகர்களின் மனத்தை கவர்பவர்.
இதனிடையே இயக்குநர் கே.வி ஆனந்தின் படங்களான ”கனா கண்டேன்” தொடங்கி அயம், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் வரை தலைப்புகள் தமிழ் பெயர்களை கொண்டவையே உள்ளது. இவர்களை போல வேறு யாரும் இவ்வாறு தமிழ் தலைப்புகளை வைக்கவில்லை என்று கூட சொல்லலாம். இது போன்ற தலைப்பிற்கு பலர் மத்தியில் விமர்சனங்களும், கிண்டல்களும் எழுகிறது என்றும் படத்தில் உள்ள வசனங்களில் தூய தமிழை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்றும் தலைப்பிலாவது தமிழ் தலைப்பு இருக்கட்டுமே என வைக்கிறேன். மேலும் கோ திரைப்படத்தின் பெயருக்கு பசுமாட்டைக் கொண்டு படம் எடுக்கிறீர்களா என்றெல்லாம் கூட கிண்டல் செய்தார்கள் என்று இயக்குநர் கே.வி . ஆனந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.