75% பேர் மின்கட்டணம் செலுத்தியுள்ள நிலையில் அவகாசம் ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் 75 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்திவிட்ட நிலையில், ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் கோருவது ஏன் என மனுதாரரிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி பொது நலவழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் ஏற்கனவே 75 சதவீத மக்கள் மின் கட்டணம் செலுத்திவிட்ட நிலையில் ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் கோருவது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுவரை மின் கட்டணம் செலுத்தப்பட்டது தொடர்பான விவரம் மற்றும் இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Exit mobile version